Writing Doves

சொல்லாடல்களில் நம்பும் எதிர்பார்ப்புகள்

Writing Doves 2019 ஆண்டில் திஷானி செனிவிரட்னவினால் தொடக்கி வைக்கப்பட்டது.இது ஒரு லாபநோக்கற்ற விசேட செயற்திட்ட முன்னெடுப்பாகும்.30 வருடகால யுத்தத்தின் பின்னரான பாதிக்கப்பட்ட சமூகத்தினருடன் மிக நெருக்கமான உறவுகளை பேணியதால் பெறப்பட்ட அனுபவங்கள் மற்றும் பல்கலைகழகத்தில் ஆங்கிலம் கற்பித்தலூடாக பெற்ற அனுபவங்களை கொண்டு, இத்திட்டத்தை வெற்றிகரமாக நெருங்க அவருக்கு உதவி புரிந்தன.

Writing Doves சிறியதானாலும் குறிப்பிடத்தக்க படிமுறைகள் இலங்கை சிறார்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வழிமுறைகளை கொண்டுள்ளது.

பல்வேறுபட்ட மொழி, மத நம்பிக்கை பின்னனிகளை கொண்ட சமுதாயங்களிலிருந்து இலங்கை சிறார்களை பல்வகை கலாச்சார புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக மும்மொழியிலான கதைகளை எடுத்துச்சொல்வது Writing Doves இன் விசேடத்துவமாகும்.

கதை சொல்வதில் சிறார்களை பங்கெடுத்து ஈடுபடுத்துவதன் மூலம் தாக்கம் செழுத்தும் ஒரு தூதுகருவியாக எடுத்துச்சொல்வதனால் உலகத்தை பெறுமானமிக்கதாக வடிவமைக்கலாம் என நம்புகிறோம்.


பார்வை

இலங்கையின் இளம் கற்போரிடம் மும்மொழியூடாக கதைகளை எடுத்துரைப்பதன் மூலம் பல்வகை கலாச்சாரங்ககிடையிலான புரிந்துணர்வை ஊக்குவித்தல்.


பணிநோக்கு செருக

இலங்கை சிறார்களிடையே வாசிப்பில் ஆர்வத்தை தூண்டுவதன் மூலம், நேர்மறை கூட்டுக்கலாச்சார உறவுகளை கட்டி எழுப்பும் மேடையை வழங்குகிறது